Saturday, July 25, 2026

என்னேரமும் உன் பாத கமலம் Enneramum un pada kamalam

 என்னேரமும் உன் பாத கமலம்

Enneramum  un pada kamalam 

 

By

Shyama  Sasthri

 

Translated  by

P.R.Ramachander

 


 

Ragam  Punnagavarali

Thalam  THriputa

 

(hear is sung by  Nithyasri  Mahadevan https://www.youtube.com/watch?v=lNK8h-t6jso)

 

பல்லவி 
என்னேரமும் உன் பாத கமல த்யானம் செய்துகொண்டு
உன்னை நம்பினேன் நம்பினேன் நம்பினேன் அம்மா

 

Pallavi maindhan naan

Yenneramum un padha  kamala  dhyyanam  seithu kondu

Unnai  nambinen  Nambinen Nambinen  Amma

 

Oh Mother , always  meditating  on your lotus like feet

I believed, believed, , believed in you

அனுபல்லவி

என்னை ரக்ஷிக்கச் சொன்னேன் சொன்னேன் 

சொந்த மைந்தன் நான் அல்லவோ
அன்னை பின்னை உண்டோ எனக்கு 

 அகிலாண்டேஸ்வரீ ஸிவ ஸங்கரீ    (என்னேரமும்)

 

Anupallavi

Yennai  rakshika  sonnen sonnen ,

Sondha maindhan naan allavo

Annai  pinnai undo  yenakku

Akhilandeswari  Shiva  Sankari  (Yenneramum

 

Anupallavi

I told you, told you to protect me ,

Am  I not  your own son

Have i Got mother or one like  mother

Oh Akhilandeswari  ,Oh  Shiva Sankari


சரணம் 1 

ஆதி சக்தி உந்தன் மஹிமையை துதி செய்யலாகுமோ

பரமன் முதலான   பேருக்காதியே பரம் ஜ்யோதியே  

பங்கயக்-கன்னியே ஏதம்மா பராமுகம் செய்யக் கூடாதம்மா

நீ கருணைக் கடலல்லவோ   (என்னேரமும்)

 

AAdhi sakthi  undhan mahimayai  thuthi  cheyyalaagumo

Paraman mudhalaana perukku aadhiye  param jothiye

Pangaya  kanniye yethamma , paaramukham seyya  koodathammaa

Nee  karunai  kadal  allavo?( yenneramum)

 

Oh primeval  power  , can we  pray  your greatness

She  who is  the first to Lord  Vishnu and others, Oh divine  light

Oh lotus  maid why , you  should  not  be indifferent

Are  you  not  the ocean of mercy(At  all times)

சரணம் 2 

Charanam 2
தாமரை மேல் தண்ணிர் போல் தயங்குகிறாயே

எந்தன் மேல் தயவு  செய்ய நல்ல தருணமிதே 

ஸிவகாமியே அபிராமியே அனுதினமும் உன் நாமமே ஜபம்

அல்லாதொன்றும் நான் அறியேனென சொன்னேன்   தாயே      (என்னேரமும்)

 

THamarai mel thanneer  pol thayangukiraaye

Yenthan  mel  dhayavu  seyya nalla  tharunamithe

Shivakamiye, Abhiramiye, anu dhinamum un naamame japam

Allathondrum  naan  ariyen yena  sonnen  thaaye  (yenneramum)

 

On  lotus  , you  are  hesitating  as if it is water,

This is proper time  to show  mercy  on me

Oh Shivakami, Oh  Abhirami, daily  I chant  only  your names

I told you  , except  that  I do not  know  any thing(At all times)



சரணம் 3 

Charanam 3


நிலவின் வரவால் அல்லி மலர் நிமிர்ந்து மலரவில்லையோ

என்னை   நிலத்தில் வாழவைத்த அன்னையே

சனாதனியே புகழ்கனியே மானியே   தமியேன் எனக்கடைக்கலம்

நேயமோடு தருவதுன் கடமையல்லவோ தாயே  (என்னேரமும்)

 

Does  not the  lily  flower  stand erect and open , due  to coming of moon

Oh mother  who made  me  live  on the land

Oh  SAnathi , oh very famous fruit, Oh  respectable one, I am poor one , Is it not

Your duty  to give refuge  in a friendly fashion, oh  mother

சரணம் 4 

Charanam 4
ஸ்யாம க்ருஷ்ண சோதரீ உன்னைத்  துதி செய்யாமல் இருப்பேனோ உன்  பாதங்களை மறவாமல் இருக்க வர(ந்)தருவாயே

ஸுக  ஸ்யாமளே நித்ய கல்யாணீ     தாமதம்  இனி செய்தால்

நான் இப்போ தாங்குவேனோ தாயே அகிலாண்டேஸ்வரீ      (என்னேரமும்)

 

Oh  sister  of black  krishna , will i stay  without  praying  you

Please  grant me boon  not to forget  your  feet

Oh pleasant  black one , Oh  Nithya  kalyani, if  you  now  show delay

Will i be able   to bear  it now , Oh Akilandeswari

 

No comments:

Post a Comment